'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் |
நடிகர் கமலின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன், 'ஹார்மோன்' ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை நீர்கட்டி பிரச்னைக்கு ஆளாகியுள்ளார். இவ்வகை நோய், 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும். உடற்பயிற்சி, உணவு முறை மாற்றத்தால், இப்பாதிப்பை சரி செய்து வருகிறார். இதுகுறித்து, ஸ்ருதி வெளிப்படையாக பேசியதுடன், உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் சில நாட்களாக, ஸ்ருதி ஹாசன் உடல்நிலை மோசமடைந்து, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அபாய கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து, ஸ்ருதி நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:ஹைதராபாதில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக, என் உடல்நிலைப் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகின்றன. பெண்களுக்கு பரவலாக ஏற்படுகிற பிரச்னை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நான் தற்போது நலமாக உள்ளேன். எனக்கு எந்த பிரச்னையும் பெரிய அளவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.